இந்தியாவின் டாப் 10 செலிப்ரிட்டியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட்!
இந்தியாவின் டாப் 10 செலிப்ரிட்டியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்!
தமிழ் சினிமாவில் டாப் 10 ஹீரோயின்களில் நம்பர் 1 இடத்தில் நீண்ட காலமாக வலம் வந்தவர் சிம்ரன். இடையழகி என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். தனது நடன அசைவினாலும், நடிப்பு திறமையாலும் இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சிம்ரன். 1997 ஆம் ஆண்டு வெளியான 'விஐபி' திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்கள் என எல்லோருடனும் நடித்து புகழின் உச்சியை அடைந்தவர்.
தனது திருமணத்திற்குப் பிறகு சினிமாக்களில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் சில காலம் கழித்து மீண்டும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட் ஸ்டார் ஓ டி டி தளத்தில் மனோஜ் பஜ்பாய் மற்றும் சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் 'குல்மொஹர்' என்ற இணையதள தொடர் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது பெற்றுள்ளது. அதிலும் சிம்ரனின் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 'இன்டர்நெட் டே மூவிஸ் டேட்டா பேஸ்' (ஐ எம் டி பி) என்ற இணையதளம் திரைப்படங்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கான தரவரிசைகளையும் விமர்சனங்களையும் வெளியிடும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தரவரிசையில் இந்திய சினிமாவில் புகழ் பெற்ற செலிப்ரிட்டிகளில் முதல் 10 இடங்களுக்கு முன்னேறி இருக்கிறார் சிம்ரன். இதனை அந்த இணையதளம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.