தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மறைந்த நடிகர் மயில்சாமி மீது பிரபல நடிகர் குற்றசாட்டு.! அவர் கூறுவதும் சரிதானே.! ரசிகர்கள் ஆதரவு!!

மறைந்த நடிகர் மயில்சாமி மீது பிரபல நடிகர் குற்றசாட்டு.! அவர் கூறுவதும் சரிதானே.! ரசிகர்கள் ஆதரவு!!

Singamuthu tribute to actor mayilsami Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. தீவிர சிவபக்தரான அவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி சிவராத்திரியன்று மாரடைப்பு ஏற்பட்டு திடீரென காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு பிறகு அவரை குறித்த பல விஷயங்களை ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிங்கமுத்து பேட்டி ஒன்றில், எனது நண்பர் மயில்சாமி உயிரிழந்தது குறித்து கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அப்பொழுது குலசாமி கோவிலுக்கு சென்றிருந்ததால் அவரது இறுதிச் சடங்கில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர். பக்தரான மயில்சாமி அவரை போன்றே மற்றவர்களுக்கு உதவி செய்து வந்தார்.

Mayilsami

அவரிடம் பெரிதாக பணம் இல்லாத போதும், வீட்டிலிருந்த நகைகளை அடமானம் வைத்து பிறருக்கு உதவி செய்தார்.  இவ்வாறு மற்றவர்களுக்கு ஓடோடி உதவிய அவர் தனது உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவில்லை என அவர் மீது குற்றம் சாட்டுவேன். நீண்ட நாள் தர்மம் செய்ய வேண்டிய நீ உனது உடம்பை கவனித்துக் கொள்ளாமல்,பார்த்துக்கொள்ளாமல் போய்விட்டாய் என்று எமோஷனலாக பேசி குற்றம் சாட்டியுள்ளார். இதனை கேட்டு ரசிகர்களும் அவர் கூறுவது போல நீங்கள் இன்னும் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும் என வருத்தமடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mayilsami #Singamuthu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story