என்னை மட்டுமில்ல., அரசியல் பின்புலத்தோடு 19 பெண்களை... வைரமுத்து விவகாரத்தில் உண்மையை போட்டுடைத்த சின்மயி.. ஆடிப்போன ரசிகர்கள்.!!
என்னை மட்டுமில்ல., அரசியல் பின்புலத்தோடு 19 பெண்களை.... - வைரமுத்து விவகாரத்தில் சின்மயி ஓபன்டாக்.. ஆடிப்போன ரசிகர்கள், அதிர்ச்சியில் திரையுலகம்.!
தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக வலம்வருபவர் சின்மயி. இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் உள்ள "ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற பாடலை பாடியதால் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் பாடிய பல பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் தான் கவிஞர் வைரமுத்து மீது இவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருந்தது. மேலும், சின்மயிக்கு எதிராக பல ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியதை தொடர்ந்து வைரமுத்துவுக்கும், சின்மயிக்கும் இடையில் பணிப்போரே ஏற்பட்டது.
அத்துடன் கவிஞர் வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தமானாலும் இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் எதற்காக வாய்ப்பு தருகிறீர்கள்? இவரையெல்லாம் படத்தில் வைக்காதீர்கள் என்று சின்மயி விமர்சித்து ட்வீட் போட்டு வந்துள்ளார். இந்த பிரச்சனையில் பெண்களுக்கு ஆதரவாக சின்மயி குரல் கொடுத்து வருவதால், அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம், பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவாக கருத்தும் தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் சின்மயி அளித்த பேட்டியில் கவிஞர் வைரமுத்து குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர், "நான் வைரமுத்துவை பற்றி கூறியது அனைத்துமே உண்மை" என்று கூறியிருந்தார். அவர் கூறியதாவது, "நான் யாரைப் பற்றியும் தேவையில்லாமல் புகழாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் சொன்னதை நினைத்து மிகவும் மனநிறைவோடு தான் இருக்கிறேன்.
ஆரம்பத்தில் அவர் குறித்து ட்வீட் போடும்போது பயந்தேன். இருந்தாலும் வெளியுலகத்திற்கு உண்மையைக்கொண்டு வரவேண்டும் என்ற துணிச்சலுடன் அதை செய்தேன். பலரும் நான் தெலுங்கு மொழியை சேர்ந்தவர் என்று கூறி விமர்சிக்கின்றனர். ஆனால் நான் சுத்தமான தமிழச்சி. அதனால் தான் எனக்கு இவ்வளவு திமிரு. அது மட்டுமில்லாமல் கவிஞர் வைரமுத்து குறித்து நான் தேவையல்லாமல் புகாரளித்தேன் என சிலர் கூறியிருந்தனர்.
என்னுடன் சேர்ந்து நான் மட்டுமல்லாமல் 19 பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். அது வெளியே வரவில்லை. என்னை மட்டும் டார்கெட் செய்தார்கள். நான் போட்ட ட்வீட் இன்டர்வியூவில் அந்த பெண்களும் கலந்து கொண்டனர். வைரமுத்துவுக்கு அரசியல் பின்புலம் அதிகமுள்ளது. இதனாலே எனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தது.
நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. என்னிடம் மொபைல் மூலம் மிரட்டிய ரெக்கார்டிங் அனைத்தும் உள்ளது. எனக்கு தெரிந்த நான்கு பேரிடம் அதனை கொடுத்து வைத்திருக்கிறேன். ஒருவேளை பிற்காலத்தில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், இதனை நீங்கள் வெளியிடுங்கள் என்று கூறியுள்ளேன். அந்தளவிற்கு நிறைய ஆட்கள் வைத்திருப்பவர் வைரமுத்து. அதேபோல தயாரிப்பாளர் ராஜன் பேட்டியில், 'உன்னத மனிதனை சின்மயி குற்றம் சாட்டியிருக்கிறார் என்றும், என்னிடமும் ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை சிதைத்து விடுவேன்' என்றெல்லாம் கூறுகிறார்.
எனக்கு உயிர் பயம் கிடையாது. மிஞ்சிப்போனால் கொலை தான் செய்வார்கள். எனக்கு உண்மை வெளிவர வேண்டும்" எனக் கூறியிருந்தார். மேலும் "அவர்கள் கூறியது போலவே என்னை தமிழ் சினிமாவில் பணியாற்ற முடியாதபடி ban செய்துவிட்டார்கள். அப்படி செய்தால் மட்டும் நான் உயிர் வாழாது போய்விட்டேனா?. தெலுங்கு மொழியில் எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஊடகமும், சுற்றி இருந்தவர்களும் என்னை ஒரு பகட காயாக மாற்றிவிட்டார்கள் " என்ற பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.