கொழுந்தனை வெறித்தனமாக போட்டுத்தள்ளிய அண்ணி.! வெளியான அதிரவைக்கும் பகீர் காரணம்!!
sister in law killed husband brother
கோவாவில் வசித்து வந்தவர் சந்தீஸ். இவரது மனைவி லத்திகா. சந்தீஸ்க்கு சர்வேஷ் என்ற தம்பி இருந்துள்ளார். அவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென கடந்த இரு தினங்களுக்கு முன்பு சர்வேஷ் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் சர்வேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் இந்த கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சந்தீப் மற்றும் லத்திகா மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர் அப்பொழுது லத்திகா தான் மற்றும் தனது கணவர் இருவரும் இணைந்தே சர்வீசை கொலை செய்தோம் என ஒத்துக் கொண்டுள்ளனர்.
சர்வேஷ் தன் அண்ணன் வீடு மற்றும் கார் வாங்க ஏராளமான பண உதவிகளை செய்துள்ளார். அந்த பணத்தை சமீபத்தில் சர்வேஷ் திருப்பி கேட்டுள்ளார். இதனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சர்வேஷ் தனது அண்ணன் எதிரிலேயே அண்ணியை அடித்ததோடு அவரது புடவையை கிழித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சந்தீஸ் மற்றும் லத்திகா இருவரும் இணைந்து சர்வேஷய் அடித்து கொலை செய்துள்ளனர் .இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்