குக் வித் கோமாளி சீசன் 3க்கு வருகை தந்துள்ள பிரபல முன்னணி நடிகர்! அட.. இதற்காகதானா?? வைரலாகும் புகைப்படம்!!
குக் வித் கோமாளி சீசன் 3க்கு வருகை தந்த பிரபல முன்னணி நடிகர்! அட.. இதற்காகதானா?? வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதையே ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்குமாறு கலகலப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருக்கும் இதன் மூன்றாவது சீசன் தற்போது படுஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கலகலப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை கூட தவிரவிடாமல் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் மே 13ஆம் தேதி ரிலீசாக உள்ளதால் இதன் பிரமோஷனுக்காக அவர் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.