இதெல்லாம் நியாயமா?? கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான் ! நடிகர் சிவகுமார் விடுத்த வேண்டுகோள்!!
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக பரவி கோரதாண்டவமாடி வருகிறது. ஒரு நாளைக்க
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக பரவி கோரதாண்டவமாடி வருகிறது. ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது. இந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்,முன்பெல்லாம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது மட்டும்தான் கொரோனா அறிகுறியாக இருந்தது. ஆனால் தற்போது வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி ஆகியவை சேர்ந்துள்ளது. இதில் எது வந்தாலும் உடனே டாக்டரை பார்த்துவிடுங்கள். மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டு வைத்தியம் பார்க்க நினைத்தால், தனியாக ஒரு அறையில் தங்குங்கள். சாப்பாடு தட்டு, டாய்லெட் ஆகியவற்றை தனியாக பயன்படுத்துங்கள்.
குழந்தைகளை வெளியே விளையாட விடாதீர்கள். கிட்டத்தட்ட ஒரு வருஷமாக டாக்டர், நர்ஸ் ஆகியோர் தங்கள் குழந்தைகளை மறந்து இரவுபகலாக வைத்தியம் பார்த்து வருகின்றனர். அதில் நூற்றுக்கணக்கானோர் உயிர்த் தியாகமும் செய்துள்ளனர். ஒரு மருத்துவமனையில் 500 படுக்கைகள் தான் உள்ளன. ஆனால் ஒரு நாளைக்கு 5000 நோயாளிகள் குவிகின்றனர். இப்படி இருக்கும்போது மருத்துவனையில் சரியாக கவனிக்கவில்லை என திட்டுவதெல்லாம் நியாயமா?
யாரும் தேவை இல்லாமல் வெளியே போகாதீர்கள். கண்டிப்பாக போக வேண்டும் என்றால் மாஸ்க் போட்டு கொண்டு பாதுகாப்பாக செல்லுங்கள். எல்லோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். ஊசி போட்டுக் கொண்டால் நம்மை கொரோனா கடுமையாக தாக்காது. உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. இப்போதைய காலகட்டத்தில் கொரோனாவை ஒழிக்க ஊசி போட்டுக் கொள்வதும், ஊரடங்கை பின்பற்றுவதும்தான் வழி என கூறியுள்ளார்.