போதும் போதும் என்ற அளவிற்கு செல்பிக்கு போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்! வைரல் வீடியோ!
Sivakumar new selfie with fan video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிவகுமார். மேலும் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தைதான் நடிகர் சிவகுமார். பொதுநலவாதி, அன்பானவர், பொறுமையானவர் என மக்களின் நன்மதிப்பை பெற்ற நடிகர் சிவகுமார் சில காலங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்படும் நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
அதற்க்கு காரணம் இந்த செல்பி. மதுரையில், மருத்துவமனை திறப்புவிழா ஒன்றிற்கு சென்ற சிவகுமாரிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சித்தபோது சிவகுமார் அந்த ரசிகரின் தொலைபேசியை தட்டி விட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் வடு மறைவதற்குள், மீண்டும் ஒரு ரசிகரின் தொலைபேசியை தட்டிவிட்டு மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலானார் சிவகுமார்.
இந்நிலையில் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ரசிகர் ஒருவருடன் செல்பியை தாண்டி வீடியோவே எடுத்து கொண்டுள்ளார் சிவக்குமார். இதிலிருந்து அவருக்கு செல்பி பிடிக்காமல் இல்லை அனுமதியுடன் எடுத்தால் ஓகே தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.