காமெடியிலிருந்து ஹீரோயினாக மாறிய சிவாங்கி.. ஆளே அடையாளம் தெரியாம மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி.!
காமெடியிலிருந்து ஹீரோயினாக மாறிய சிவாங்கி.. ஆளே அடையாளம் தெரியாம மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி.!
பிண்ணனி பாடகி மற்றும் நகைச்சுவை நடிகையான சிவாங்கி கிருஷ்ண குமார் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு அசத்தினார்.
குக் வித் கோமாளியில் சிவாங்கி, புகழ், பாலா இவர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இந்நிகழ்ச்சி மூலமே சிவாங்கியின் ரசிகர் கூட்டம் பெருகியது. இதன்பின் சிவாங்கி வெள்ளிதிரையில் படங்கள் நடிக்க தொடங்கினார்.
வெள்ளித்திரையில் பல பாடல்கள் பாடி பிரபலமானாலும் முதன்முதலில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'டான்' திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைபடங்களை பதிவு செய்து வருகிறார். அவ்வாறு இவர் சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.