"அஜித் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரே உடையில் 12 நாட்கள் இருந்தேன்" எஸ் ஜே சூர்யாவின் மனமுடைந்த பேட்டி..
அஜித் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரே உடையில் 12 நாட்கள் இருந்தேன் எஸ் ஜே சூர்யாவின் மனமுடைந்த பேட்டி..
தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளவர் எஸ். ஜெ. சூர்யா. 1999ஆம் ஆண்டு "வாலி" திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். முன்னதாக வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ். ஜெ. சூர்யா. அவருடன் "ஆசை" படத்தில் பணியாற்றியபோது நடந்த சுவாரசிய சம்பவங்களை இயக்குனர் மணிபாரதி பகிர்ந்துள்ளார்
ஒரு பேட்டியில், "ஆசை படத்திற்காக டெல்லி மற்றும் குளுமணாலிக்கு 12 நாட்கள் ஷூட்டிங் சென்றோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் ஒரு உதவி இயக்குனர் தான் செல்லமுடியும் என்பதால் இயக்குனர் வசந்தத்துடன் சென்றேன். ஆனால் எஸ்.ஜெ. சூர்யாவுக்கு டெல்லி செல்ல ஆசை இருந்தது.
அந்த படத்தில் ஒரு நாய்க்குட்டி இருக்கும். அதற்கும் டெல்லியில் காட்சிகள் இருந்ததால், இயக்குனரிடம் சூர்யா தான் அதைக் கொண்டு வந்தார் என்று கூறி அவருக்கும் டிக்கெட் போட்டு ரயிலில் ஏற்றினோம். ஆனால் அங்கிருந்த 12 நாட்களும் ஒரே உடையில் தான் அவர் சுற்றிக்கொண்டு இருந்தார்" என்று கூறியுள்ளார்.