×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னம்மா இது! இரண்டாவது திருமணமா? நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட வீடியோவால் குழம்பிபோன ரசிகர்கள்!

Sonia agarwal post video about marriage

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த காதல் கொண்டேன்  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகை சோனியா அகர்வால் கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப் பயலே என பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்தபோது, சோனியா அகர்வாலுக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர்கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.  

அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் களமிறங்கிய சோனியா அகர்வால் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சோனியா அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தாலி கட்டுவது திருமணம் நடைபெறுவது போன்ற வீடியோக்களை  வெளியிட்டு நாட்களை எண்ணுவது போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 இதனை கண்ட ரசிகர்கள் சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா என கேள்வி எழுப்பியதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இது அவரது புதுபடம் அல்லது ஏதேனும் வெப்சீரீஸ்கான விளம்பரமாக இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sonia agarwal #marriage #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story