இனி அப்படியில்லை! லாக்டவுனிற்கு பின் வில்லன் நடிகர் சோனுசூட் எடுத்த அதிரடி முடிவு! வரவேற்கும் ரசிகர்கள்!
பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், இனி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்சினிமாவில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இவர் கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் , கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது, விவசாயிகளுக்கு உதவுவது என தொடர்ந்து ஏராளமான உதவிகளை செய்து வந்துள்ளார்.
இவ்வாறு மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக வாழ்ந்து வரும் சோனுசூட்டுக்கு தற்போது வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம். மேலும் கொரோனா லாக்டவுனுக்கு முன் தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த அல்லுடு அதுர்ஷ் என்ற படத்திலும் சோனு சூட்டின் கதாபாத்திரத்தை முற்றிலும் மாற்றி, புதிய கதையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சோனு சூட்டும் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை, பாசிட்டிவான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.