நடிகர் சூர்யா படைத்த அசத்தலான சாதனை! செம உற்சாகத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!
soorai potru second look trending
தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான என்ஜிகே படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. மாபெரும் படுதோல்வியை சந்தித்தது.
அதனைத்தொடர்ந்து வெளியான காப்பான் திரைப்படமும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது சுதா கோங்குரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என பெருமளவில் எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது வைரலான நிலையில் அது தமிழ் சினிமா வரலாற்றில் அதிக ட்வீட் அதாவது 2.6 மில்லியன் ட்வீட் செய்யப்பட்ட இரண்டாவது போஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் இதனை ரசிகர்கள் #SooraraiPottruMostTweetedSL என டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.