சூப்பர் ஸ்டார் படத்தில் இந்த பிரபல காமெடி நடிகனா? முதல் முறையாக இணையும் கூட்டணி! உற்சாகத்தில் ரசிகர்கள்.
Soori casting in thalaivar 168
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தர்பார் படத்தை அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் தலைவர் 168 படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
மேலும், வேறு யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளிவராத நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் பரோட்டா சூரி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.