கொரோனா ஊரடங்கால் பாதிக்கபட்டவர்களின் பசிபோக்க, நடிகர் சூரி செய்த அசத்தலான காரியம்!
Soori provide 100 ricepack to FEFSI
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவிய நிலையில் 6000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் திரைப்பட தினக்கூலி தொழிலாளர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் பலரும் நிவாரண நிதிகள் வழங்குவது, அரிசி, பருப்பு. மளிகைபொருட்கள் வழங்குவது என தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சூரி பெப்சி தொழிளாளர்களுக்கு 25கி கொண்ட 100 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
மேலும் துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25கி கொண்ட 20 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். மேலும் ஏழை மக்கள் 100 பேருக்கு உணவளித்துள்ளார். நடிகர் சூரி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்திற்கு 1 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார்.