×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊரடங்கில் ஒருநாள் ஆசிரியரான சூரி! ஆன்லைனில் பாடம் எடுத்து அசத்தல்! உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

Soori take online class to government school student

Advertisement

இந்தியாவில் கொரோனோ வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு,  படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். மேலும் பலர் சமூக வலைதளங்களில் டிக்டாக் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் முடங்கிய பிரபல காமெடி நடிகர் நாள்தோறும் தனது குழந்தைகளுடன் சிறு கருத்துக்களுடன் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவை சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதுமட்டுமின்றி அவர் ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்ட கூலிதொழிலாளர்களுக்கு, பெப்சி அமைப்பு என பலருக்கும் தொடர்ந்து தன்னால் முயன்ற உதவியை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சூரி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்துள்ளார். மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் சூரி அரசு பள்ளி மாணவர்களுடன் பாடங்களை நினைவூட்டும் விதமாக சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது அவர் தற்போதைய காலத்தில் கல்வியின் முக்கியத்துவம், விடாமுயற்சி ஆகியவற்றை குறித்து தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டு மிக நகைச்சுவையாக மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் மாணவர்கள் கேட்ட பல குறும்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். இதனை அதிகாரிகள் பலரும் ரசித்து மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Soori #Online class #Madurai student
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story