தனது ஹோட்டலில் வேலை செய்யும் 350 ஊழியர்களுக்கும் முழு சம்பளத்தை வழங்கிய நடிகர் சூரி..! சூரியின் மகத்தான செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
Sooris large hearted corona gesture for employees
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ஹோட்டலில் வேலை செய்யும் அணைத்து ஊழியர்களுக்கும் முழு சம்பளத்தையும் வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறார் நடிகர் சூரி.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து வீடுகளிலையே முடங்கியுள்ளனர். இந்நிலையில், பல்வேறு ஹோட்டல்களை நடத்திவரும் நடிகர் சூரி, ஊரடங்கு உத்தரவின் போது தனது ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையிலும், அதில் வேலை செய்யும் சுமார் 350 ஊழியர்களுக்கு சம்பளத்தில் எந்த பிடித்தமும் இன்றி முழு சம்பளத்தையும் வழங்கியுள்ளார்.
கொரோனா சமயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தினமும் ஏதாவது ஒரு கான்செப்டில் விடீயோ ஒன்றினை பகிர்ந்துவருகிறார் சூரி. இந்நிலையில், சூரியின் இந்த மனிதாபிமான செயலை கண்டு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.