அதிரடியாக சௌந்தர்யா ரஜினி வெளியிட்ட ஒரு ட்வீட், உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்.!
sowndarya tweet about ponniyin selvan movie
சோழ ராம்ராஜ்ய பேரரசரான அருள்மொழிவர்மனின் வாழ்க்கை வரலாறு பற்றிய எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் காவியம் 'பொன்னியின் செல்வன்’ . இதனை திரைப்படமாக தரும் முயற்சி செய்தனர். ஆனால் அத்தகைய மாபெரும் காவியத்தை சுருக்கி படமாக எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் அதனை இயக்குநர் மணிரத்னம் கூட திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தார்.மேலும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி வெப்சீரிஸ் ஒன்றை சௌந்தர்யா ரஜினிகாந்த், எம்.எஸ். பிளேயர் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.
இதுகுறித்து பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இந்த வலைத்தொடர் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எனது கனவு திட்டம்!!! ... இந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி. இதற்காக May 6 Entertainment மற்றும் MX Player ஆகியோருடன் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் MX ஒரிஜினல் வெப் சீரிஸாக வெளியாகப் போகிறது. கடவுள் எங்களை ஆசிர்வதிக்கட்டும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.