அடுத்த படத்திற்கு தயாரான சௌந்தர்யா ரஜினிகாந்த்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அடுத்த படத்திற்கு தயாரான சௌந்தர்யா ரஜினிகாந்த்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தனுசை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். அதன்பின்னர் எந்த திரைப்படமும் இயக்கவில்லை. இதனிடையே பொன்னியின் செல்வன் நாவலை இணைய தொடராக எடுக்க விரும்புவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேங்ஸ் என்ற இணைய தொடரை அவர் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த இணைய தொடரில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.