நீச்சல் உடையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்-விமர்சிக்கும் ரசிகர்கள்!
sowtharya rajinkath-son
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார்.
இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரின் மகனான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது படங்களை இயக்கும் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார்.
ஆனாலும் தனது குழந்தைக்காக நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.இன்று சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மகனான வேதுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த அனைவரும் தமிழகம் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீர் சேமிப்பது குறித்து பேசாமல், நீச்சல் குளத்தில் குளிப்பது அவசியமா? என கேள்வி எழுப்பியதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா அதை டுவிட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.