கண் பார்வையிழந்த தனது ரசிகருக்காக பாடகர் எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
Spb surprise for his blind fan
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இந்த மரணம் பலரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அரச மரியாதையுடன் குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில் எஸ்.பி.பியின் நெகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூறும்வகையில் சமூக வலைதளங்களில் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவ்வாறு எஸ்.பி.பி அவர்கள் விபத்தில் பார்வையை இழந்த தனது ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அந்த வாலிபர் எஸ்.பி.பியின் குரல் கேட்டதும் ஆச்சர்யத்தில் உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு அனைவரையும் மகிழ்வித்த எஸ்பிபி தற்போது நம்முடன் இல்லையே என வேதனையுடன் ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.