நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு மிகவும் பிடித்தமான தமிழ் நடிகை இவரா! வெளியான புகைப்படத்தால் குவியும் லைக்குகள்.
Sridivya keerthi suresh
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு விஷ்ணு விஷால் உடன் இணைந்து ஜீவா. நடிகர் விஷால் உடன் மருது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதிவ்யா.
தமிழில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே தெலுங்கு சினிமாவிற்கு சென்றார். ஆனால் அங்கு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது. தற்போது தமிழிலும் படவாய்ப்புகள் குறையவே அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மிகவும் பிடித்தமான நடிகை என்று கீர்த்தி சுரேஷை கூறியுள்ளார். மேலும் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.