நயன்தாராவை எதிர்த்து உங்களால் ஒரு கேள்வி கேட்க முடிந்ததா.! நயன்தாராவை வம்புக்கு இழுத்த நடிகை ஸ்ரீரெட்டி...!
Srireddy told about nayanthara
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என நடிகர்கள், இயக்குனர்கள் என பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு திரையுலகையே அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி .
அதனை தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த் போன்றோர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார்.இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவை வழுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பிரபலமான ஹுரோயின்களின் உறவை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா.
நயன்தாரா கூட திருமணமானவர், திருமணம் ஆகாதவர் ஆகியோருடன் உறவில் சில காலம் வாழ்ந்து வந்தார். ஆனால் அதனை பற்றி யாரும் நயன்தாராவிடன் கேள்வி கேட்கவில்லை. அது தான் ஒரு பெரிய நடிகைக்கும், போராடிக்கொண்டு இருக்கும் நடிகைகளுக்கும் இடையே நீங்கள் காட்டும் வித்தியாசம் என்று கூறியுள்ளார்.