நடிகை ஸ்ரீதேவி சிலைய செய்ய சொன்னால், யார் சிலையை செஞ்சு வஞ்சிருக்காங்க பாருங்க.
Statue for actress sridevi
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. ரஜினி, கமல் போன்ற தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் பிஸியாகிவிட்டார். மேலும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்தார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் நினைவு நாளை கொண்டாடினர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவியை நினைவு கூறும் வகையில் பிரபல Madame tussauds என்னும் அருங்காட்சியகத்தில் ஸ்ரீ தேவிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஸ்ரீதேவி போல இல்லை என்றும் அவரின் மகள் ஜான்வி கபூர் போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நீங்களே அந்த சிலையை பாருங்கள்.