×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் பாணியில் பட தலைப்பு! சிம்பு, சுந்தர் சி கூட்டணி புது அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

STR and Simbu new movie title and first look on deepavali

Advertisement

சிறுவயது முதலே நடனம், நடிப்பு என தனது திறமையால் எட்ட முடியாத உயரத்திற்கு வளர்ந்தவர் நடிகர் சிம்பு. ஒரு சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வந்த சிம்புவுக்கு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியது. STR இஸ் கம் பேக் என்றே சொல்லலாம்.

இதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  மாநாடு என்ற படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. அதை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் ஒரு படத்திலும் சிம்பு நடிக்கிறார். இந்த படத்திற்காக இரவு பகலாக நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம். இன்னும் இந்த படத்திற்க்கு பெயரிடப்படாத நிலையில் “V” என்ற எழுத்தில் தொடங்கும் தலைப்பை வைத்துள்ளதாகவும் வரும் தீபாவளி அன்று படத்தின் பெயர் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

சமீபகாலமாக தல அஜித் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் ‘V’ என்ற வார்த்தையில் தொடங்கும் பெயரினையே வைத்திருந்தனர். சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பதால் இந்த படத்திற்கு ‘V’ என்ற வார்த்தையில் துவங்கும் தலைப்பை வைத்துள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.



 


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#str #Sundhar c #new movie #Deepavali 2018
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story