35 ஆண்டுகளுக்கு முன் திருமண கோலத்தில் இயக்குநர் மணிரத்தினம், சுகாசினி.! வைரல் புகைப்படம்.!
35 ஆண்டுகளுக்கு முன் திருமண கோலத்தில் இயக்குநர் மணிரத்தினம், சுகாசினி.! வைரல் புகைப்படம்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்தினம். 30 ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்திய சினிமாவில் ரொமான்டிக் இயக்குனராக மணிரத்தினம் இருந்து வருகிறார். இவருடைய நாயகன், மௌன ராகம், ரோஜா, தளபதி, பாம்பே, ஓ காதல் கண்மணி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பெரும்பான்மையான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை தான்.
இறுதியாக இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
மணிரத்தினம் கடந்த 1988ல் சுகாசினியை திருமணம் செய்தார். இவர் நடிகர் கமலஹாசனின் சகோதரர் மகளும் நடிகையும் ஆவார். 35 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இந்த தம்பதிகளுக்கு நந்தா என்ற மகன் இருக்கின்றார்.
தனது படங்களிலேயே அதிகப்படியான காதல் காட்சிகளை ரசிகர்களின் மனம் கவரும் விதமாக காட்டி இருக்கும் மணிரத்தினம் அவரது நிஜ திருமண வாழ்வில் காதல் குறைத்து கேட்கவா வேண்டும்.? அப்படிப்பட்ட காதல் மனைவி சுகாசினியுடன் திருமணத்தில் மணிரத்தினம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.