"என்னது... மௌன ராகம் பார்ட் 2 இந்த படமா இருக்க வேண்டியதா".? சுஹாசினி பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்.!
என்னது.? மௌன ராகம் பார்ட் 2 இந்த படமா இருக்க வேண்டியதா.? சுஹாசினி பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்.!
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான மௌன ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டார். கார்த்திக் மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் உருவான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகச் சிறந்த திரைப்படமாக மௌன ராகம் பெயர் வாங்கியது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய மணிரத்தினம் இன்று இந்திய சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவர் கல்கியின் புண்ணியம் செல்வ நாவலை தழுவி அதனை திரைப்படமாக எடுத்தார். இரண்டு பாகங்களாக வெளியான அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இவரது இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சலி. இந்தத் திரைப்படத்தில் ரகுவரன், ரேவதி மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை சுற்றி நடைபெறும் கதையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மணிரத்தினத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இந்தத் திரைப்படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தைப் பற்றிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அஞ்சலி திரைப்படம் மௌன ராகம் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக இருந்ததாம். மோகன்தான் அதில் கதாநாயகனாக நடிக்க இருந்தாராம். மோகன் மற்றும் ரேவதிக்கு பிறந்த குழந்தைக்கு இதுபோன்று ஒரு பாதிப்பு இருப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அந்தக் கதை மாறியதாக அவரது மனைவி சுகாசினி நடிகை ரேவதி உடனான பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.