அது போலியானது.. ப்ளீஸ் எச்சரிக்கையாக இருங்கள்! உண்மையை உடைத்த நடிகை சுஹாசினி!! என்னாச்சு தெரியுமா?
சமீப காலமாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பல பிரபலங்களின் பெயர்களில் போலியான சமூ
சமீப காலமாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பல பிரபலங்களின் பெயர்களில் போலியான சமூக வலைதளபக்கங்களை தொடங்கி மர்மநபர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு போலி கணக்குகளை தொடங்குபவர்கள் பிறரைக் குறித்து தவறான கருத்துக்கள் வெளியிடுவது, வாய்ப்பு தருவதாக மோசடி செய்வது, புதிய படங்கள் குறித்த தகவலை வெளியிடுவது என எல்லை மீறுகின்றனர்.
மேலும் அவற்றை பிரபலங்களின் உண்மையான சமூக வலைதளப்பக்கங்கள் என எண்ணி ரசிகர்களும் ஏமாறும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை ரசிகர்கள் சிலரும் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகையும், இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி தனது ட்விட்டர் பக்கத்தில், நபர் ஒருவர் டைரக்டர் மணிரத்னம் ட்விட்டரில் இணைந்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். அது போலி கணக்கு. அந்த நபர் போலியானவர். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள், மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள், நன்றி என கூறியுள்ளார்.