×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமைதியாக இருந்து பிக்பாஸ் பட்டத்தை ஜெயிக்கப்போவது இவர்தானா.! அதிரடியாக போட்டுடைத்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரின் கணவர்!!

suja varuni husband talk about mugen

Advertisement

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவக்குமார் பிக்பாஸ் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் இதயம் என்னிடம் சொல்கிறது முகேன்தான் அந்த கருப்புகுதிரை. அவர்தான் அமைதியாக பிக்பாஸ் தலைப்பைப் பெறபோகிறார். அவரது கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அது சுவாரஸ்யமாக இருக்கிறது .. நான் ஏற்கனவே மலேசியாவை விரும்புகிறேன். முகேன் மீதான காதல் என்னை மலேசியாவை அதிகம் நேசிக்க வைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #mugen #suja varunee
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story