திடீரென பிரபலமாகும் செய்தி வாசிப்பாளர்! ஏன் எதுக்குன்னு இப்போவரைக்கும் யாருக்கும் தெரியல!
Sun news reader anitha trending in social media
திடீரென பிரபலமாகி வருகிறார் தனியார் தொலைக்காட்சி செய்து வாசிப்பாளர் ஒருவர். சில சமயங்களில் சம்மந்தமே இல்லாமல் சிலர் திடீரென பிரபலமாவது உண்டு. இவளோ தூரம் இவர்கள் பிரபலமாக என்னடா காரணம்னு யோசிச்சு பாத்தா நமக்கும் ஒன்னும் புரியாது, பிரபலம் ஆனா அவர்களுக்கும் ஒன்னும் புரியாது.
அந்தவகையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா திடீரென சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அனிதா சம்பத் பேசுகையில். சமீப காலமாக நான் ட்ரெண்டிங்கில் இருக்கேன்னு என் பிரிஎண்ட்ஸ் என்கிட்டே சொன்னப்போ, நான் என்னுடைய போஸ்ட்ட ஷேர் பண்றத நிறுத்திடேன்.
சமீபத்தில் எனக்கு சர்கார் படத்தில் ஒரு வாய்ப்பும் கிடைத்தது. தற்போது சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி வரும் சூர்யா 37 படத்தில் நடித்து வருகிறேன்.ஹீரோயினாக இல்லைங்க ஒரு சின்ன ரோலில் தான் நடித்துள்ளேன்.
அதே போல 2.0 படத்திலும் ஒரு செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் அனிதா.