சர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்! விஜய் ரசிகர்கள் நிம்மதி
Sun pictures confirmed Sarkar release date
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் தீபாவளிக்கு சர்கார் வெளியாகும் என்ற செய்தி அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வார விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமையே வெளியாகுமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தான் வெளியிடப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.