என்னாச்சு?.. நடுரோட்டில் அமர்ந்து கூவி கூவி மீன்விற்கும் சன் டிவி பிரபலம்..! இதுதான் சங்கதியா..!!
என்னாச்சு?.. நடுரோட்டில் அமர்ந்து கூவி கூவி மீன்விற்கும் சன் டிவி பிரபலம்..! இதுதான் சங்கதியா..!!
தமிழில் பிரதானமான தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி. இந்த தொடரில் நாயகியாக கேப்ரியல்லா செல்லஸ் நடித்து வருகிறார். இவர் மக்கள் மத்தியில் குட்டி தேவதையாகவும் இடம் பிடித்துள்ளார்.
இவர் சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளைத்திரைகளும் நடித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் கபாலி, ஹைரா போன்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சந்தையில் மீன் விற்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் ஷூட்டிங்காக அவை எடுக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்ட ரசிகர்கள்.. அச்சச்சோ என்னாச்சு?., நம்ம சுந்தரியா இது.. நடுரோட்டில் இப்படி கூவி கூவி மீன் விக்கிறாங்களே என்றும், சிலர் எங்க குட்டி தேவதை எப்போதும் அழகுதான் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.