33 வயதில் யாருக்கும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்துகொண்ட சன் டிவி சீரியல் நடிகை!
Sun tv serial fame srithika marriage photos
சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா. மெட்டி ஒலி சீரியலை தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் போன்ற தொடர்களிலும், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரித்திகா.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு, அழகு ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 33 வயதாகும் நடிகை ஸ்ரித்திகா தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.
எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திடீரென திருமணம் செய்துகொண்டார் நடிகை ஸ்ரித்திகா. ஒருசில நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.
தனது திருமணம் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என ரசிகர்களுக்கு கூறியுள்ளார் நடிகை ஸ்ரித்திகா.