இனி அதை பத்தி பேசாதீங்க! தீயாய் பரவிய வதந்தி! உண்மையை உடைத்த நடிகை சுனைனா!!
தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தி
தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. அப்படத்தை தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சுனைனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சில்லுக்கருப்பட்டி மற்றும் சமீபத்தில் வெளிவந்த ட்ரிப் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மேலும் சுனைனா தற்போது தெலுங்கில் ராஜ ராஜ சோரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுனைனாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஒன்றரை வருடங்களில் எனக்கு ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மேலும் சில இயக்குனர்கள் என்னை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றதுபோல கதையை எழுதுகின்றனர. இது எனக்கு உற்சாகம் அளிக்கிறது.
இந்நிலையில் எனக்கு தற்போது திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து பரவிவரும் செய்திகள் உண்மை கிடையாது என விளக்கமளித்துள்ளார். மேலும் என் கவனம் முழுவதும் சினிமாவிலேயே உள்ளது. இனி என் திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்தி விடுங்கள் எனவும் கூறியுள்ளார்