வேதனைகளை சாதனையாக்கிய தல அஜித்; அதிர்ச்சிதரும் உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி.!
வேதனைகளை சாதனையாக்கிய தல அஜித்; அதிர்ச்சிதரும் உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி.!
அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் அஜித் குமார் தொடர்பாக சில தகவலை பகிர்ந்துகொண்டார். அதில், "அப்படம் எடுக்கும்போது நியூசிலாந்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக முதுகுவலி பிரச்சனை இருந்தது. அவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இதனை தயாரிப்பு தரப்பிடம் கூறினால், அவர்கள் சம்மதித்தாலும், இல்லை என்றாலும் அடுத்தடுத்த இழப்புகள் ஏற்படும். இதனால் அஜித் சார் என்னிடம், விஷயத்தை கூறி ஒரு வாரத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்ய கோரிக்கை வைத்தார். நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். நியூசிலாந்தை பொறுத்தமட்டில் ஒருநாளில் 22 மணிநேரம் கட்டாயம் சூரிய வெளிச்சம் இருக்கும்.
இதனால் இரவுபகல் பாராட்டு ஒரே வாரத்தில் அஜித் சார் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு அவரை அனுப்பி வைத்தோம். அவர் அறுவை சிகிச்சைக்குப்பின் ஒருவேளை உயிர்போகலாம் அல்லது உட்கார்ந்து இருக்க முடியாத நிலை ஏற்படும் என்று அஞ்சிக்கொண்டு இருந்ததால், இப்போது இருக்கும்போதே அனைத்தையும் எடுக்கவும் வலியுறுத்தினார். அவரின் வலிகள் எனக்கு பின்புதான் புரிந்தது.
அதாவது அவரின் முதுகுவலி பிரச்சனை காரணமாக கால்களில் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பார். தரையை பார்த்தால் நாம் அடுத்த காலடியை எடுத்து வைப்பது நமக்கு தெரியும். அவர் தரையை பார்த்துக்கொண்டே அன்று நடப்பார். ஏனெனில் அவர் கால்களை எங்கு வைத்தோம் என்ற உணர்ச்சியும், குளிர் சூழ்நிலை உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. அவரின் வாழ்க்கை பல வேதனைகளை கடந்து சாதனையானது" என கூறினார்.
சுந்தர் சி இயக்கத்தில், அஜித்குமார், மாளவிகா, சிவகுமார், மனோரமா, விவேக், கிரண், ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி, அல்வா வாசு உட்பட பலர் நடிக்க 1999 ல் வெளியான படம் உன்னைத்தேடி. இப்படம் தான் மேற்கூறிய வலிகளை பொறுத்து அஜித்தால் நடித்து கொடுக்கப்பட்ட திரைப்படம். அதில் இடம்பெடுரல்ல காற்றாக வருவாயா என்ற பாடல் படப்பிடிப்பு தான் ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் உங்களின் பார்வைக்காக.,