"ரஜினிக்கென்று இருக்கும் குணம் இது தான்!" படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவம்!
ரஜினிக்கென்று இருக்கும் குணம் இது தான்! படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவம்!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் பாலசந்தர் இயக்கிய "அபூர்வ ரகங்கள்" படத்தில் தான் முதலில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் வில்லனாக மட்டும் நடித்து வந்த ரஜினி "பைரவி" படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
தற்போது வரை தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார் ரஜினி. சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரஜினியைப் பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு தனது தனித்துவமான ஸ்டைலான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளவர் ரஜினி.
இந்நிலையில் அருணாச்சலம் படத்தின் போது நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குனரான சுந்தர் சி ஒருநாள் காலை 9.30 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் குழுவினர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாராம்.
அப்போது சீக்கிரமாக படப்பிடிப்பிற்கு வந்த ரஜினியைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி நிற்கவே, "எனக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும் நானும் வரவா?" என்று கேட்டாராம். ஆனால் அவரது கண்களில் படப்பிடிப்பு தளத்தில் விளையாடுவது தவறு என்ற கோபம் தெரிந்ததாம். இதுதான் ரஜினியின் குணம் என்று சுந்தர் சி ஒரு முறை கூறியிருந்தார்.