குஷ்பு இல்லைனா.. கண்டிப்பா அந்த நடிகைக்குதான் ப்ரபோஸ் பண்ணிருப்பேன்!! ஓப்பனாக போட்டுடைத்த இயக்குனர் சுந்தர் சி!!
குஷ்பு இல்லைனா.. கண்டிப்பா அந்த நடிகைக்குதான் ப்ரபோஸ் பண்ணிருப்பேன்!! ஓப்பனாக போட்டுடைத்த இயக்குனர் சுந்தர் சி!!
தமிழ் சினிமாவில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. அதனைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காபி வித் காதல்.
மேலும் அவர் ஹீரோவாகவும் களமிறங்கி தனது அசத்தலான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி நடிகை குஷ்புவை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுந்தர் சி தன்னுடன் பணியாற்றிய நடிகைகள் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து பேசிய அவர், நான் பணியாற்றிய நடிகைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ரொம்ப நல்ல கேரக்டர், அப்படியொரு நல்ல பெண்ணை பார்ப்பது ரொம்ப அரிது.
ஒருவேளை குஷ்பு தன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக செளந்தர்யாவுக்குதான் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன். சவுந்தர்யாவின் அண்ணனுக்கு அவர் மீது அதிக பாசம். தங்கையை விட்டு நகரவே மாட்டார் இறக்கும் போதும் கூட இருவரும் ஒன்றாகவே இறந்து விட்டார்கள், ரொம்பவே துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.