தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுந்தரி சீரியல் நடிகையை அவமானப்படுத்திய நபர்.. பதிலடி கொடுத்த நடிகை.?

சுந்தரி சீரியல் நடிகையை அவமானப்படுத்திய நபர்.. பதிலடி கொடுத்த நடிகை.?

Sundari serial actress openup about her cinema life Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியலான சுந்தரி சீரியலில் முக்கியமான நடிகையாக நடித்து வருபவர் கேப்ரியலா. இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானார்.

Sundari

இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு டிக் டாக் செயலியின் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்தார். இவரது வீடியோவுக்கு தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வந்தன. இதையடுத்து சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் பிரபலமாக நடித்துக் கொண்டிருக்கிறார் கேப்ரியலா.

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கேப்ரியாலா, ஆரம்பத்தில் கலந்து கொண்டு சினிமாவில் நுழைவதற்கு தான் பட்ட கஷ்டங்களையும், சவால்களையும் கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவர் ஒரு ஆடிஷனில் கலந்து கொண்ட போது, ​​ஒரு நபர் இவரிடம் வந்து உன்னை எல்லாம் யாரு நடிக்க வர சொன்னா என்று அவமானப்படுத்தினாராம். இதற்கு உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று திருப்பி கேள்வி கேட்டு, அதற்கு அந்த நபர் சில்க்ஸ்மிதா என்று கூறவும், அவங்களை யார் நடிக்க செலக்ட் பண்றாங்களா அவங்க தான் என்னை செலக்ட் பண்றாங்க என்று பதிலடி கொடுத்தாராம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sundari #actress #Kollywood #serial #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story