அடேங்கப்பா.. சன்னி லியோனையே தன் ரசிகையாக்கிய தம்பி ராமையா! ஆச்சரியப்படுத்திய சுவாரசிய தகவல்கள்!
இந்தியளவில் ஆபாச நடிகையாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சன்னி லியோன்.
இந்தியளவில் ஆபாச நடிகையாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சன்னி லியோன். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாலிவுட் நடிகையான இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் தற்போது ஷீரோ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சதீஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் தம்பி ராமையா சன்னி லியோனுடன் இணைந்து நடித்தது குறித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். அப்பொழுது அவர், ஷீரோ படத்தில் நான் சன்னி லியோனை அடையத்துடிக்கும் காமெடி சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இப்படத்தில் எனது கதாபாத்திரத்திற்காக நானே டயலாக் எழுதியுள்ளேன். மேலும் டூப் இல்லாமல் சண்டை காட்சி ஒன்றில் நடித்து இருந்தேன். அதன் மூலம் எனக்கு சன்னிலியோன் ரசிகையாகிவிட்டார். சன்னிலியோன் எப்பொழுதும் படப்பிடிப்புக்கு தனது 3 குழந்தைகளுடனே வருவார். அந்த குழந்தைகள் என்னுடன் நன்றாக பழகுவர் விளையாடுவர். அதனாலேயே சன்னி லியோன் அவரது அறையை எனது அறைக்குப் பக்கத்தில் மாற்றிக்கொண்டார் என கூறியுள்ளார்.