×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.! குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.!! வைரலான 2-வது மகனின் புகைப்படம்.!!

வாவ்.! குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.!! வைரலான 2-வது மகனின் புகைப்படம்.!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய டி ஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரும் நடித்து வருகின்றனர். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். 73 வயதிலும் படப்பிடிப்பு என பிசியாக  இருந்தாலும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கு பிறகு விசாகன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது விடுமுறைக்காக தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இந்தியாவிற்கு வருகை புரிந்த அவர் தனது குடும்பத்தாருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இதுவரை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகாத சௌந்தர்யா ரஜினிகாந்தின் 2-வது மகன் புகைப்படம் இதில் இடம் பெற்றிருப்பது தான் ஹைலைட்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Kollywood #Rajnikanth #Soundharya Rajnikanth #Holi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story