ரஜினிகாந்தின் மகளுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு : அவரே கூறிய நெகிழ்ச்சி உண்மை..!
ரஜினிகாந்தின் மகளுக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு : அவரே கூறிய நெகிழ்ச்சி உண்மை..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் நடைபெற்ற நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த மணவாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்றார். பின் குடும்பத்தினர் இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். முதல் திருமணத்தில் இவருக்கு வேத் என்ற ஒரு ஆண் குழந்தை இருந்ததை தொடர்ந்து, சமீபத்தில் இரண்டாவது திருமணத்தின் மூலம் இரண்டாவது ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்ற பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த புகைப்படத்தை பதிவிட்டு இந்த ஆண்டு கடவுள் தனக்கு மிகப்பெரிய பரிசை கொடுத்துள்ளதாகவும், தனது வீர் பாப்பாவை அவர்கள் பரிசாக தந்துள்ளதாகவும் சௌந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழந்தை எப்பொழுதும் கடவுளின் கிப்ட் தான் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னுடைய குழந்தையின் பெயர் சூட்டுவிழாவின் புகைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில், தனது குழந்தையை கைகளில் ஏந்தி மாலையுடன் காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.