கண்ணழகி பிரியா வாரியார் என்ன ஆனாங்க தெரியுமா! அவருக்காக உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
Supreme court cancelled all cases against to priya wariyar

மலையாள பாடலில் புருவங்களை அசைத்தும் கண் சிமிட்டியும் நடித்த பிரியா வாரியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடலில் பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்தது. இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி, ஒரே நாளில் நாடு முழுவதும் இளைஞர்களை கவர்ந்துவிட்டார்.
இந்நிலையில் பிரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மும்பை மாநில காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த பாடல் இதன் மூலம் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார்களில் பிரியா வாரியரை குற்றம் சாட்டப்படும் முதல் நபராகவும், படத்தின் இயக்குநரை இரண்டாவது நபராகவும் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை எதிர்த்து பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியா வாரியர் மற்றும் இயக்குனர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.