கைவிடப்பட்டதா சூர்யா 41! ஒத்த பதிவால், புகைப்படத்தால் உண்மையை உடைத்த பிரபல நடிகர்!!
கைவிடப்பட்டதா சூர்யா 41! ஒத்த பதிவால் உண்மையை உடைத்த பிரபல நடிகர்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நந்தா, பிதாமகன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவுடன் கூட்டணியில் இணைந்து சூர்யா 41வது படத்தில் நடித்து வருகிறார். மீனவர்களின் பிரச்சனையை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது.
மேலும் இதில் சூர்யாவிற்கு ஜோடியாக, ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பில் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சூர்யா பாதியிலேயே வெளியேறிவிட்டார் எனவும் தகவல் பரவியது. மேலும் இந்த படம் மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை எனவும், கைவிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர், மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலாவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.