ஜப்பான் மொழியில் வெளியாகும் சூரரைப்போற்று.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!!
ஜப்பான் மொழியில் வெளியாகும் சூரரைப்போற்று.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!!
கடந்த 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் ஜிவி பிரகாஷின் இசையில் நவம்பர் 12,2020 அன்று வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் கொரோனா காரணமாக அமேசானில் நேரடியாக விற்பனை செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடிகர்கள் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா உட்பட பலரும் நடித்திருந்தனர்.
தற்போது இப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படுகின்றது. இதுகுறித்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே பெரும் வரவற்பைப் பெற்றுள்ளது.