ஒரு டுவிட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சூர்யா-சந்தோஷத்தில் அதிகம் ஷேராகும் ட்விட்
suriya -ngk
இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இந்தப் படம் யு சான்றிதழை பெற்று இன்று பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது. காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது, ரசிகர்களும் நல்ல விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
ரசிகர்களும் NGK பட ரிலீஸ் சந்தோஷத்தில் அவரது டுவிட்டை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.