பிரபல இயக்குனரின் குடும்பத்தை அவமானப்படுத்திய சூர்யா.!
பிரபல இயக்குனரின் குடும்பத்தை அவமானப்படுத்திய சூர்யா.!
சூர்யாவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஒரு திரைப்படம் தான் அயன். அந்த திரைப்படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த் அவருடைய இறப்புக்கு பிறகு அவர் குடும்பத்திற்கு சூர்யா செய்த அவமரியாதை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அந்த திரைப்படத்தை தவிர்த்து மாற்றான், காப்பான் போன்ற வெற்றி படங்களை சூர்யாவுக்கு வழங்கியதால், கே.வி. ஆனந்திற்கும், சூர்யாவிற்கும் நெருங்கிய நட்பு இருந்தது. மாற்றான் திரைப்படம் வெளியான சமயத்தில், தமிழத்தில் வினியோக உரிமையை வாங்கியிருந்தவர் ஞானவேல் ராஜா. அவர் திரைப்படத்தின் நீளத்தை இயக்குனரிடம் கேட்காமல் குறைத்து விட்டார்.
இதன் காரணமாக, சூர்யாவுக்கும், அவருக்கும் வருத்தம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாற்றான் திரைப்படத்தின்போது மன்னிப்பு கேட்டு சமாதானமும் ஆகிவிட்டனர். அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது திடீரென்று கே.வி.ஆனந்த் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடல் கூட உறவினர்களிடம் வழங்கப்படவில்லை.
அவர் இறப்புக்குப் பிறகு கே.வி.ஆனந்த் குடும்பத்தை நேரில் சந்தித்த சூர்யா, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் நான் இருக்கிறேன் எந்த உதவியானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று கே.வி. ஆனந்தின் குடும்பத்தினர் பத்திரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், அந்த திருமணத்திற்கு சூர்யா வருகை தரவில்லை. சூர்யாவின் திரைதுறை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த ஒரு இயக்குனரின் மகள் திருமணத்திற்கு வராமல் சூர்யா இருந்து விட்டார். அவர் சார்பாக யாருமே அந்த திருமணத்திற்கு வரவில்லை என்பதுதான் வேதனை. இதனை கே.வி.ஆனந்தின் நெருங்கிய நண்பரான ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார்.