கடற்கரையில் உல்லாசமாக வாக் சென்ற சூர்யா - ஜோதிகா தம்பதியினர்...வைரலாகும் புகைப்படம்.!
கடற்கரையில் உல்லாசமாக வாக் சென்ற சூர்யா - ஜோதிகா தம்பதியினர்...வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ஜெய் பீம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர் வாடிவாசல் மற்றும் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சூர்யா, ஜோதிகா தம்பதியினர் கடற்கரையில் உல்லாசமாக நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.அப்புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.