துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம்... அட இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே!!
துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம்... அட இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் கடந்த 2012-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் தளபதி விஜய் முதல்முறையாக நடித்து வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி.
இப்படம் விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாகும். இப்படத்தில் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார். துப்பாக்கி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெரும் வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் அடித்தது.
ஆனால் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருத்தது நடிகர் சூர்யா தானாம். அப்போது 7 ஆம் அறிவு படத்தில் சூர்யா நடித்து வந்த காரணத்தால் அதனை முடித்து விட்டு துப்பாக்கி படத்தில் நடிப்பதாக கூறியுள்ளாராம்.
ஆனால் அதற்கிடையில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்க்கு ஒரு கதை கூற்றுப்படி ஏ.ஆர். முருகதாஸிடம் கேட்டுள்ளார்.அப்போது, விஜய்க்கு முருகதாஸ் கூறிய கதை தான் துப்பாக்கி. இதனால், தான் துப்பாக்கி படத்தில் சூர்யாவால் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் கூறப்படுகிறது.