கடைசியா அவரது முகத்தை பார்க்க முடியலையே.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய நடிகர் சூர்யா!
கடைசியா அவரது முகத்தை பார்க்க முடியலையே.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய நடிகர் சூர்யா!
நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் பிரபலங்கள் பலரும் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சூர்யா, விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணனோட இந்த பிரிவு மிகவும் துயரமானது. ரொம்ப கஷ்டமாகவுள்ளது. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் பாராட்டை பெற்றுத் தரவில்லை. அப்பொழுதுதான் பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் அன்பாக, அக்கறையாக இருப்பார்.
அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன், அப்பொழுது நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும் என கூறி அவரே ஊட்டிவிடுவார். அவருடன் நடித்த நாட்களில் பிரமித்துப் போனேன். யார் வேணாலும் அவரை எளிதில் சந்தித்து பேசலாம். அவரது உழைப்பை பார்த்து வியந்துள்ளேன். இறுதி அஞ்சலியில் அவரது முகத்தை நேரில் பார்க்க முடியவில்லை. அது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என கண்கலங்கியவாறு பேசியுள்ளார்.