பக்கா மாஸ்... கங்குவா படத்தில் சூர்யாவின் லுக் இதானா.? வைரல் புகைப்படம்.!
பக்கா மாஸ்... கங்குலி படத்தில் சூர்யாவின் லுக் இதானா.? வைரல் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் முதன்மையாக இருப்பவர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. வரலாற்று பின்னணியை கொண்ட திரைப்படமாக இது உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பத்து மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை கிரீன் ஸ்டுடியோ சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கான சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா ஜிம் செய்யும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் அதையே எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சூர்யாவின் புதிய லுக் புகைப்படம் ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. காதில் கடுக்கனுடன் ட்ரெண்டிங்கான தாடி செட்டிங்கில் மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார் சூர்யா.
இந்த புகைப்படம் வெளியானதிலிருந்து திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் அவர் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இந்த லுக்கும் ஒரு கேரக்டராக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.