மேடையில் சூர்யா பேசும்போது திடீரென ஓடிவந்த இளைஞர்! அனைவரும் தடுத்தும் சூர்யா செய்த காரியம்!
Surya taken selfie with fan at ngk meet
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் தோல்வியை தழுவியது.
தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துள்ளார் சூர்யா. NGK படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் படம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் ஆந்திராவில் விழா ஒன்றில் கலந்துகொண்டு சூர்யா பேசிக்கொண்டிருக்கும்போது அவரது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை செல்பி எடுக்காவிட்டால் தடுத்தனர். ஆனால், சூர்யா அந்த இளைஞரிடம் தொலைபேசியை வாங்கி அவரே செல்பி எடுத்தார். சூர்யாவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. சூர்யாவின் தந்தை சிவகுமார் செல்பி எடுத்த இளைஞர்களின் தொலைபேசியை தட்டிவிட்டதே சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் வர காரணம்.